பேராவூரணியில் 2020-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சமூகப் பணிகளை சேவையாக செய்து வரும், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் – தலைவராக விஆர்ஜி.நீலகண்டன், செயலாளராக M.மகாராஜா மற்றும் பொருளாளராக M.செந்தில் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2024 முதல் 2026 வரை, பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகளாக செயல்படுவர் என பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய பொறுப்பாளர்களுக்கு நண்பர்களும், அறக்கட்டளையின் உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அறக்கட்டளையின் முன்னாள் பொறுப்பாளர்களாக செயல்பட்ட நாகேந்திர குமார், சண்முகநாதன் மற்றும் வன்மீகநாதன் ஆகியோருக்கு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் நன்றியை தெரிவித்தனர்.